Posts

Showing posts from February, 2019

நடிகர் அஜித்துக்கு அண்ணாபல்கலை கழகம் நன்றி தெரிவித்தது

Image
நடிகர் அஜித் ஆலோசகராக கொண்ட சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின், கல்லூரி மாணவர்கள் குழு உருவாக்கிய தக் ஷா என்ற ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் பங்கேற்று உலக நாடுகளுக்கு இடையே சாதனை படைத்துள்ளது. மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான என்ற போட்டி நடந்தது. உலகெங்கிலும் இருந்து 55 நாடுகளில் இருந்து ஆளில்லா குட்டி விமானங்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். அதில் 11 விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் நடிகர் அஜித்தை தொழில்நுட்ப ஆலோசகராக கொண்ட அண்ணா பல்கலைகழகத்தின் மாணவர் குழுவின் தக்ஷா விமானம் இரண்டாவது இடம் பிடித்து உலக அளவில் சாதனை படைத்துள்ளது.