அம்மாவின் அன்பு/தமிழ் பறவைகள்
அம்மா என்ற சொல்லே நானறிந்த வேதம் அவளின் பாதம் வணங்கினாலே போதும் தேவையில்லை வேறேதும் எத்தனை தெய்வங்கள் வந்தாலும் வரங்கள் கோடி தந்தாலும் ஒரு தாயின் அன்புக்கு ஈடாகுமா அவளின் தியாக சேவைக்கு நிகராகுமா... பாரில் உள்ள அனைத்தும் அவள் பாத மண்ணுக்கு இணையாகுமா... அவளின்றி அமையாது இவ்வுலகம்